• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா

June 20, 2025 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியின் டிப்ளமா விருது வழங்கும் விழா பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.கிரிராஜ் வரவேற்புரை ஆற்றினார்.பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. பிரகாசன் தலைமை வகித்தார்.இதில் தலைமை விருந்தினராக கேட்டர்பில்லர் மைனிங் பிரிவு, பெங்களூருவின் மைனிங் இயக்குநர்
ஆண்டி தன்ராஜ் கலந்துக்கொண்டு
ஆடைக்கலை தொழில்நுட்பம்,கார் பொறியியல், கணினி பொறியியல், கணினி நெட்வொர்க்கிங்,மின்சார மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பாடல் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டிப்ளமோ படிப்பை முடித்த 390 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

மேலும், டிப்ளமோ படிப்புகளில் முதலிடம் பிடித்த 15 பேருக்கு விருதும்,பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.முன்னதாக அவர் பேசுகையில்,என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கான திட்டங்களை வடிவமைத்து, அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க