• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது

May 10, 2025 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிபிஎஸ் மோட்டர்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான விற்பனை நிறுவனமான ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி நிறுவனம் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எஸ்பிஐ வங்கியின் மாவட்ட பொது மேலாளர் ஹரிஹரன்,சிறப்பு அழைப்பாளர்கள் மண்டல மேலாளர் காயத்திரி,ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி நிறுவனத்தின் மேலாளர் ரஞ்சித்குமார் சிபிஎஸ்இ மோட்டார்ஸ் எம்ஜி டிவிசனல் குழுமத்தின் சிஇஓ நீரா,சிஇஓ நோயல் ஆகியோர் கலந்து கொண்டு வின்ட்சர் புரோ புதிய காரை அறிமுகம் செய்து வைத்தனர்.

வின்ட்சர் புரோ மாடல் காரை குறித்து பிபிஎஸ் மோட்டர்ஸ் எம்.ஜி நிறுவனத்தின் டிவிசனல் பர்சனல் நோயல் வின்ட்சர் புரோ மாடல் பேட்டரி காரை அறிமுகம் செய்துள்ளோம்.இதற்க முன்பு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த வின்ட்சர் வாகனம் சுமார் 20000 வாகனங்கள் விற்பனை செய்துள்ளோம். அதுமட்டுமின்றி 29 விருதகளை பெற்றோம்.இதன் மூலமாக வடிகையாளர்கள் எங்கள் வாகனங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதை புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆகவே வாடிக்கையாளர்களிடம் நிறை,குறைகளை கேட்டறிந்தோம். அவர்களின் கருத்துப்படி பேட்டரி ரேஞ்ச் 38 கிலோ வாட்டில் இருந்து 53 கிலோ வாட்டாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 440 கிலோ மீட்டர் வரை சவாரி செய்யலாம். அதுமட்டுமின்றி காரின் உட்கட்மைப்பில் அதிக இடைவெளி இருப்பதால் ஒரு பிஸ்னஸ் கிளாஸ் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் அதிநவின தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யப்பட்டதுள்ளது.

தற்போது 6 வண்ணங்களில் இந்த வாகனம் அறிமுகம் செய்துள்ளோம்.புதிதாக அராரோ சில்வர்,சிவப்பு,நீலம் ஆகிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளோம். இதுவரை 8000 வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இனிவரும் காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்கின்றோம்.மேலும் மலிவான விலையில் ஒரு சொகுசு கார் வாங்கிய திருப்தியை வின்ட்சர் புரோ மாடல் கார் தரும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க