• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மது அருந்த பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

January 5, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அருகே மது அருந்த பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூலூர் அருகே உள்ள அரசூர் பல்லவாநகரைச் சேர்ந்த நாகராஜ் (52) என்பவர்,மது அடிமை.நேற்று முன்தினம், மது அருந்த பணம் கேட்டபோது மனைவி சுவேதா (38) மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில், கோபம் அடைந்த நாகராஜ், சுவேதாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியால் சுவேதாவின் இடது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுவேதா, அலறித் துடித்தார்.

சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த சுவேதாவை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுவேதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், நாகராஜை கைது செய்து, அவரிடமிருந்து கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்தனர்.மது அடிமை கணவரின் கொடூர செயலால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க