• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருமத்தம்பட்டி பஸ்நிறுத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள் – எடுக்க கோரி பா.ஜ.க சார்பில் மனு

June 26, 2023 தண்டோரா குழு

பா.ஜ.க கோவை வடக்கு மாவட்டம் மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதி அவிநாசியப்பன் தலைமையில் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

கோவையிலிருந்து சென்னை, சேலம், திருப்பூர், ஈரோடு,நாமக்கல் ஆகிய இடங்களிலிருந்து கோவைக்கு வரும் மார்க்கத்திலும் இடையில் முக்கிய சந்திப்பாக கருமத்தம்பட்டி நகர் உள்ளது.
கருமத்தம்பட்டி நகரில் பல்லாயிரம் கணக்கான பள்ளி கல்லூரி மாணவமாணவிகள்,வேலைக்கு செல்லும் பணியாளிகள்,மருத்துவமனைக்கு
செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள்
பெரும்பாலானவை கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பிற்கு வராமல் பைபாஸ் பாலத்திலேயேசென்று விடுகிறது.பல பேருந்துகள் பயணிகளை பைபாஸ் பாலம் மேலேயே ஏற்றியும்,இறக்கியும் சென்றுவிடுவதால் சாலை விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது.

மேலும் பேருந்து நடத்துனர்களும் கோவையிலிருந்து கருமத்தம்பட்டிக்கு குடும்பத்தோடு வரும் பயணிகளை மிக மோசமாகவும்,கேவலமாகவும்
அவமானப்படுத்துகின்றனர்.இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கும்
மனவுளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.எனவே காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4மணி முதல் 7 மணி வரையிலும் சென்று வரும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு,பணிக்கு
செல்பவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இந்த நேரங்களில் கூடுதல் பேருந்துகளுடன் அனைத்து பேருந்துகளும் கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பிற்கு வந்து சென்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பொருட்டு
தாங்கள் தயவுகூர்ந்து பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு
பொதுமக்கள் நலன் கருதி கருமத்தம்பட்டி மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனு அளிக்க வந்திருந்த பொழுது உடன் ராமசாமி, நாச்சிமுத்து, பேச்சிமுத்து, துரைசாமி, தனசேகர், சண்முகசுந்தரம், மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க