• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

30 வருடங்களுடக்கு பிறகு ரஜினி – அமிதாப்பச்சன் கூட்டணி !

June 10, 2023 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக வெளியாகிவுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியானது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படமானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரஜினியின் 170வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனிடையே ரஜினியின் 170வது படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விக்ரமை அணுகியதாகவும், பின்னர் அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் புதிய அப்டேட்டாக ரஜினியின் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்டு கிட்டதட்ட அவர் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது உண்மையானால் 30 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையும் படமாக இப்படம் இருக்கும். அதேசமயம் அமிதாப்பச்சனின் முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க