• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேசனல் மாடல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 35 வது ஆண்டு விளையாட்டு விழா

July 28, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள நேசனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35ம் ஆண்டு விளையாட்டு விழா கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர் தீபன் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவர் மன்ற மாணவர்கள் பள்ளியின் கொடியை ஏற்றினர். தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். 12, 14, 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பேபி, கோத்தகிரி பள்ளி முதல்வர் கவிதா, நிர்மலா, சந்திரிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க