• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேம்போர்டு பள்ளியின் மாணவர்கள் தலைவர், மாணவியர் தலைவி பதவியேற்பு

July 28, 2022 தண்டோரா குழு

கோவை கேம்ஃபோர்டு இன்டர் நேஷனல் பள்ளியின் 12-வது மாணவர்கள் தலைவர், மாணவியர் தலைவி மற்றும் பள்ளி குழுத்தலைவர்கள் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு விமானப்படையின் அதிகாரி விங்க் கமாண்டர் எஸ்.நிதின் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசும்போது, தலைவரின் குணங்கள், பண்புகளையை எடுத்துரைத்தார்.

உயர்ந்த இலக்குகளுடன் கடுமையான உழைப்பு உச்சத்துக்கு கொண்டு செல்லும். எளிதாக தவறு செய்வதைவிட கடுமையாக இருந்தாலும் நல்ல பாதையை தேர்ந்தெடுத்து அறவழியில் செல்ல வேண்டும் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பள்ளிக் கவுன்சில் தலைவர்களாக தங்களது கடமையையும் நேர்மையுடன் நிறைவேற்றுவோம் என இளம் மாணவர் தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாணவர் தலைவராக ஹர்ஷில் பாவிக் மோமாயாவும், மாணவிகளின் தலைவியாக சஞ்சனாவும் பொறுப் பேற்றனர்.

பள்ளித் தலைவர் அருள்ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ், முதல்வர் பூணம் ஷயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க