• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்தி சாலையில் இருசக்கர வாகனம் அரசு கழிப்பிட சுவற்றில் மீது மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

April 25, 2022 தண்டோரா குழு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(21)அதே ஊரை சேர்ந்த ஸ்ரீஜித்(25). இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் மில்லில் பணியாற்றி வந்தனர்.இவர்கள் இருவரும் அன்னூரை சேர்ந்த தங்களது நண்பரான லூர்து சகாயராஜ்(25) என்பவருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் அன்னூர்-சத்தி சாலையில் விளையாட்டாக வளைத்து, வளைத்து ஓட்டியவாறு அதிக வேகமாக சென்றுள்ளனர்.

அப்போது,சத்தி சாலையில் உப்புத்தோட்டம் கட் ரோடு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக இருந்த அரசு பொதுக்கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதில் கழிப்பிடத்தில் இருந்த மூதாட்டி லட்சுமி(60) படுகாயமடைந்தார்.

மேலும் இந்த விபத்துல் படுகாயமடைந்த கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் உள்ளிட்ட இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தனர்.மேலும் படுகாயமடைந்த லூர்து சகாயராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க