• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய ஈஷா!

March 21, 2022 தண்டோரா குழு

ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

தாணிக்கண்டி, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, மடக்காடு, மத்வராயபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மாணவிகள் மற்றும் 4 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த இம்மாணவர்கள் ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்ட படிப்பை தொடர உள்ளனர்.

இந்நிகழ்ச்சி ஆதியோகிக்கு செல்லும் வழியில் இருக்கும் சிவாங்கா குடிலில் இன்று (மார்ச் 20) நடைபெற்றது. இதில் போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம் பங்கேற்று கல்வி உதவி தொகைகளை வழங்கி வாழ்த்து கூறினார்.

ஈஷாவின் கல்வி உதவி தொகையின் மூலம் பட்டப் படிப்பை முடித்து தனியார் நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க