• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆலந்துறையார் திருக்கோவில்

April 28, 2018 findmytemple.com

சுவாமி: ஆலந்துறையார், வடமூல நாதர், யோகவனேஸ்வரர்.

அம்பாள்: அருந்தவ நாயகி, யோகத பஸ்வினி, மகாதபஸ்வினி.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம்.

தலவிருட்சம்: பழு ஆல்.

தலச்சிறப்பு : இத்தலத்தில் இறைவன் தானாக தோன்றியுள்ளார் (சுயம்பு லிங்கம்). அன்னை உமையவள் உலக உயிரினங்களின் நலனுக்காக ஒரு காலில் நின்று தவம் செய்கிறாள்.இறைவன் புற்று மண்ணாக இருப்பதால் பஞ்ச பூதங்களில் மண் தத்துவத் தலம்.சண்டீசர் சிவபூஜை செய்யும் பஞ்சலோக அரிய வடிவம்.இங்கு தான் பரசுராமன் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்கி இறைவன் அருள் பெற்றான்.கருவறை வாயின் மேல்நிலையில் பரசுராமன் சயன வடிவம் உள்ளது. பங்குனி 18-ஆம் நாள் சூரியன் தனது ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடுகிறான்.இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி,சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க