• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு வைகுந்தவல்லி தாயார்

October 12, 2018 findmytemple.com

சுவாமி : வைகுந்த பெருமாள்.

அம்பாள் : வைகுந்தவல்லி தாயார்.

தீர்த்தம் : ஐரம்மத தீர்த்தம்.

விமானம் : முகுந்த விமானம்.

தலச்சிறப்பு :

இத்திருக்கோவில் மாடகோயில் வகையைச் சார்ந்தது. மூன்று நிலைகளைக் (தளங்கள்) கொண்டுள்ளது. முதல் தளத்தில், மூலவர் வைகுந்தப் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில், மேற்குப் பார்த்த வண்ணம் எழுந்தருளி அருள்புரிந்து கொண்டுள்ளார். இரண்டாம் தளத்தில், அரங்கநாதப் பெருமாள், வடக்கே தலைவைத்து அனந்த சயன திருக்கோவில் எழுந்தருளி அருள்புரிந்து கொண்டுள்ளார். மூன்றாம் தளத்தில், பரமபதநாதர் நின்ற திருக்கோவில் எழுந்தருளிய அருள்புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு பெருமாள் இருந்த, கிடந்த, நின்ற திருக்கோலங்களைக் கொண்டு மும்மாடக் கோயிலில் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.

தல வரலாறு :

இக்கோவில் மகாவிஷ்ணுவ இருந்த, கிடந்த, நின்ற கோலங்களைக் கொண்ட மும்மாடக் கோயில். இக்கோவில் பரமேஸ்வரவர்மன் என்ற 2ஆம் நந்திவர்ம பல்லவ மன்னனால் எழுப்பப்பட்டு பரமேஸ்வர விண்ணகரம் எனப் பெயரிடப்பட்டடுள்ளது. ராஜசிம்மன் காலத்து பாணியில் கட்டப்பட்ட கற்றளி எனக் குறிப்பிப்பட்டுகிறது.

நடைதிறப்பு :

காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.

கோயில் முகவரி : அருள்மிகு வைகுந்தவல்லி தாயார் உடனுறை திருப்பரமேச்சுவர விண்ணகரம் திருக்கோவில் (சிவகாஞ்சி),காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

மேலும் படிக்க