• Download mobile app
20 Aug 2025, WednesdayEdition - 3479
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு இலஞ்சிக் குமாரர் திருக்கோயில்

October 5, 2018 findmytemple.com

சுவாமி : குமாரர் சுவாமி

தீர்த்தம் : சித்ராநதி

தலவிருட்சம் : மகிழம்

தலச்சிறப்பு : அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு : இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்தப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணித்தார். இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட, அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார் . அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அவர் சித்ரா நதி தீர்த்தத்ற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். வெண்மணலுக்கு “தேவாகைரியில் இருவானுகம்” என்ற பெயர் இருந்ததால் அதற்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே, இன்னும் முடியவில்லையே என எண்ணிய, அகத்தியர் முருகபெருமானை வேண்டினார். முருகபெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலை குறுக்கி குற்றாலநாதராக்கு” என பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த பணியை முடித்தார்.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

பூஜை விவரம் : தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள் : சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி தனுர்பூஜை தைபூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

அருகிலுள்ள நகரம் : குற்றாலம்

கோயில் முகவரி : அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி -627805, திருநெல்வேலி மாவட்டம்.

தொலைபேசி எண் : 04633-283201,226400,223029.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1.ஸ்ரிஸ்டி கார்டன் ரிசோர்ட்ஸ்,

145, ஓல்ட் குற்றாலம் தென்காசி,

குற்றாலம் – 627 814.

2.குற்றாலம் இசக்கி ரிசோர்ட்ஸ்,

பய்வ் பால்ஸ் மெயின் ரோடு,

குற்றாலம் – 627 802.

மேலும் படிக்க