• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சச்சின், கங்குலிக்கு பின் தோனி காலில் விழுந்த ரசிகர்!

March 16, 2017 tamilsamayam.com

விதர்பா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியின் போது, முன்னாள் கேப்டன் தோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்தவர் முன்னாள் கேப்டன் தோனி. இவர் தனது பொறுப்புக்களை இளம் விராட் கோலியிடம் கொடுத்துவிட்டு, ஹாயாக உள்ளார். இந்நிலையில் ஒருநாள் தொடரில் மட்டும் பங்கேற்று வரும் தோனி, இங்கிலாந்தில் நடக்கவுள்ள மினி உலகக்கோப்பை (சாம்பியன் டிராபி) தொடருக்கு மிகத்தீவிரமாக தயாராகி வருகிறார்.

இதற்காக இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் ஜார்கண்ட் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் விதர்பா அணிக்கு எதிரான காலிறுதிபோட்டியில் தோனி விளையாடிக் கொண்டிருந்த போது, மைதானத்துக்குள் புகுந்த ரசிகர் ஒருவர் திடீரென தோனியின் காலில் விழுந்தார்.

இதைப்பார்த்த பாதுகாவலர்கள், அம்பயர்கள் அவரை தடுக்க முயற்சிக்க, தோனி அவரை அழைத்து, ஆட்டோகிராப் போட்டு பத்திரமாக வெளியேற்றினார். இதற்கு முன் ஜாம்பவான் சச்சின், கங்குலி ஆகியோர்களுக்கு இதே போல பலமுறை ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க