• Download mobile app
24 May 2026, SundayEdition - 3756
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சத்தி சாலையில் புதிய ரிவர் இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு: சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

February 21, 2026 தண்டோரா குழு

கோவையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ராஜதுரை இ-மொபைலிங் நிறுவனம் சார்பில் ‘ரிவர்’ (River) மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் கோவை சத்தி சாலையில் நேற்று தொடங்கப்பட்டது.

​இந்த புதிய கிளையை நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அஸ்வினி, சேர்மன் சுந்தரேசன் மற்றும் ரிவர் நிறுவனத்தின் டீலர் டெவலப்பர் ஹெட் ரஞ்சனா ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

​நிகழ்வில் பேசிய நிர்வாகிகள், “ஸ்டைல் மற்றும் செயல்திறனில் ரிவர் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. 120 முதல் 130 கி.மீ வரையிலான சிறப்பான மைலேஜ் மற்றும் குறைந்த மின் செலவு இதன் கூடுதல் பலம்,” எனத் தெரிவித்தனர்.

திறப்பு விழாவை முன்னிட்டு, புதிய வாகன முன்பதிவுகளுக்குச் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க