• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிச்சல் ஜான்சன், கமின்ஸ், டிரன்ட் போல்ட் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம்!

February 20, 2017 tamilsamayam.com

ஐபிஎல் 2017 சீசனுக்கான ஏலத்தில், இந்திய வீரர்களை விடவும், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கே அதிக தேவை நிலவுகிறது.

ஏலம் கேட்பு தொடங்கியது முதலாகவே, வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படும் அதேசமயம், இந்திய வீரர்களில் பலர் தொடர்ந்து கழற்றிவிடப்பட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில், நியூசிலாந்து ஆல் ரவுண்டர் டிரன்ட் போல்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக, ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர், இன்றைய ஏலத்தில் 3வது அதிகபட்சமாக விலை போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ரூ.4.20 கோடிக்கு விலை போயுள்ளார். அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே ஏலம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மின்னல் வேக பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் ரூ.4.50 கோடிக்கு, டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு நட்சத்திர பந்துவீச்சாளரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்சல் ஜான்சன், ரூ.2 கோடிக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க