• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகேந்திர சிங் ‘பாகுபலி’யான ‘தல’ தோனி!

May 17, 2017 tamilsamayam.com

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆப் சுற்று போட்டியில், தல தோனி, புதுப்பட்டம் பெற்றார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றன.

மும்பையில் நடந்த தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், மும்பை, புனே அணிகள் மோதின, இதில் ‘தல’ தோனியின் கடைசி நேர மேஜிக் ஒர்க் அவுட்டாக, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புனே அணி, முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது.

இதில் ‘தல’ தோனி, 5 இமாலய சிக்சர்களை பறக்கவிட, அங்கேயே ரசிகர்கள் தல தோனிக்கு புதுப்பெயர் வைத்துவிட்டனர். அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களுக்கு, ஐபிஎல் தொடரின் எல்லா போட்டிகளிலும் பரிசு அளிப்பது வழக்கம், அதே போல மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 5 சிக்சர்கள் அடித்ததற்காக பரிசு அறிவிக்கப்பட்டது.

அப்போது தோனியின் தீவிர ரசிகை ஒருவர், பேனர் ஒன்றை காட்டினார் அதில் மகேந்திர சிங் பாகுபலி என எழுதியிருந்தார். இதற்கு ஏற்ப, இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல் தொடரில் தோனி, தனது 7வது ஐபிஎல் பைனலில் பங்கேற்கிறார்.

மேலும் படிக்க