• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோயிப் மாலிக் – சானியா மிர்சா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

October 30, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.இவர் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியும்,இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார்.இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.இதற்கிடையில்,கடந்த ஏப்ரல் மாதம் சானியா மிர்சா தான் கர்ப்பமுற்று இருப்பதாக தகவல் வெளியிட்டார்.

இந்நிலையில்,சோயிப் மாலிக் – சானியா மிர்சா ஜோடிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.இதனை சோயிப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.இதையடுத்து,சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க