• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாங்க வந்துட்டோம்ன்னு சொல்லு..திரும்பி வந்துட்டோம்ன்னு சொல்லு…:’டான்’ ரோகித்!

May 20, 2017 tamilsamayam.com

ஐபிஎல் தொடரின் பைனலில் புனே அணியை பழிதீர்க்க திரும்பி வந்துவிட்டதாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றன.

மும்பையில் நடந்த தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், புனே அணி மும்பை அணியை வீழ்த்தி நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து பெங்களூருவில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை வென்ற கொல்கத்தாவை அணி, இரண்டாவது தகுதிச்சுற்றில், மும்பை அணியை எதிர்கொண்டது.

இதில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, பைனலில் புனே அணியை சந்திக்கிறது. இதில் பழிதீர்க்க தயாராக உள்ளதாக மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து ரோகித் கூறுகையில்,

இந்த நாளுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தோம். பவுலர்கள் சரியான இடைவெளியில் விக்கெட் கைப்பற்றியதால், ரன்களை கட்டுப்படுத்த முடிந்தது. புனே அணியும் இந்த போட்டியை பாத்திருப்பார்கள், பைனலில் அவர்களை நோக்கி தான்வந்து கொண்டிருக்கிறோம். கோப்பையை கைப்பற்ற ஒரே ஒரு வெற்றி தான் தேவை. அதை நிச்சயம் பெறுவோம்,’ என்றார்.

மேலும் படிக்க