• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

November 16, 2019 தண்டோரா குழு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தல 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்தது. புஜாரா 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்சில் 493 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணியை விட 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

இந்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணி 213 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் இந்திய அணி தரப்பில் சமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 2 இஷாந்த் சர்மா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க