• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மச்சான் தோனியைப் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது, பிராவோவின் நெகிழ்ச்சி பதிவு

June 24, 2017 தண்டோரா குழு

என் மச்சான் தோனியைப் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அந்த அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடந்த முதலாவது போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

இதற்கிடையில், போட்டி தொடங்குவதற்கு முன் வலைப்பயிற்சியில் மேற்கொண்ட இந்திய வீரர்கள் தோனி, பாண்டியாவுடன் பிராவோ உள்ளிட்ட மேற்கித்தியத் தீவுகளின் வீரர்கள் உரையாடிக் கொண்டிருந்த புகைபடம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அப்பபுகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிராவோ “என் மச்சான் தோனியை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இரு அணிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐபிஎலில் சென்னை கிங்ஸ் அணியில் விளையாடிய மேற்கிந்திய வீரர் பிரவோவிற்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். இதனால், பிராவோவின் இந்தப் பதிவுக்குக் கீழ் இந்திய ரசிகர்கள் பலரும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க