• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி !

November 23, 2018 தண்டோரா குழு

மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைத்து உலக கோப்பை பெறும் வாய்ப்பை இழந்தது.

6_வது மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியா கயானாவில் நவம்பர் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று நடைப்பெற்ற நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்கொண்ட இந்தியா போராடி தோல்வியடைந்தது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய மகளிர் அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. இந்திய அணி சார்பில்,அதிகபட்சமாக மந்தனா 34 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் கேப்டன், ஹேத்தர் நைட் 2 ஓவர் வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின், தொடக்க ஆட்டக்கார‌ர்களை இந்திய அணி வந்த வேகத்தில் பெவிலியன் திருப்பியது. ஆனால், அடுத்த‌தாக களம் இறங்கிய ஏமி ஜோன்ஸ் மற்றும் நட்டாளி ஸ்கீவர் இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் வரும் வரும் நவம்பர் 25 அன்று நடைப்பெறும் உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியினை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

இம்முறை இந்திய அணி கோப்பையை உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

மேலும் படிக்க