• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த மிதாலி ராஜ் !

July 12, 2017 தண்டோரா குழு

மகளிர் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார்.

மிஸஸ் கூல் என்றழக்கப்படுபவர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். 16 வயதில் சதமடித்ததன் மூலம் மிக இளம் வயதில் சதமடித்த வீராங்கனை, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்த வீராங்கனை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இவர் படைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் மகளிர் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை மித்தாலி ராஜ் நிகழ்த்தி உள்ளார்.

மகளிர் உலகப் கோப்பை இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. இதில், பிரிஸ்டலில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் மிதாலி ராஜ் இந்தத் ஆட்டத்தில் 33 ரன்களை எடுத்தபோது மகளிர் ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்தார்.

இதன் மூலம் 191 போட்டிகளில் 5992 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்சன் முந்தைய சாதனையை மித்தாலி முறியடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் தொடரில் 6000 ரன்களை தொட்ட முதல் வீராங்கனை என்ற பெருமையை மிதாலி ராஜ் படைத்துள்ளார்.

மேலும் படிக்க