• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ மறுப்பு!

February 22, 2019 தண்டோரா குழு

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் கண்டன முழக்கங்ககளை எழுப்பி வருகின்றனர்.இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி மத்திய அரசு, அந்நாட்டை உலக அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 விழுக்காடு வரி விதித்ததுடன், வர்தகத்துக்கு உகந்த நாடு எனும் சிறப்பு அந்தஸ்த்தையும் ரத்து செய்தது.

இந்நிலையில் வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கும் முடிவு பற்றி ஐசிசிக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் அனுப்பிவைக்கப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க