• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புனே டெஸ்ட் : இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெ. ஆப்பிரிக்க அணி ஆல் அவுட்

October 12, 2019 தண்டோரா குழு

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 601/5 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. இதில் விராட் கோலி இரட்டை சதமடித்து சாதனை புரிந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. புருய்ன் (20), நாட்ஜே (2) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. ஷமி ‘வேகத்தில்’ நாட்ஜே (3) அவுட்டானார். உமேஷ் பந்தில் புருய்ன் (30) வெளியேறினார். பின், இணைந்த கேப்டன் டுபிளசி, குயின்டன் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த டுபிளசி அரை சதம் கடந்தார். அஷ்வின் ‘சுழலில்’ குயின்டன் (31) ஆட்டமிழந்தார். டுபிளசி 64 ரன்கள் எடுத்தார். முத்துசாமி (7) விரைவில் திரும்பினார்.

பிலாண்டர், மஹராஜ் ஜோடி பவுலர்களுக்கு தொல்லை தந்தது. மஹராஜ் (72) அரை சதம் கடந்தார். அஷ்வின் ‘சுழலில்’ ரபாடா (2) சிக்க, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிலாண்டர் (44) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க