• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரட் லீயை பாராட்டிய சச்சின்!

September 13, 2017

டுவிட்டர் மூலம் ஜாம்பவான சச்சினை முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். இவர் சதத்தில் சதம், உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். குறிப்பாக இவரது காலத்தில் மிகச்சிறந்த அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

இதனால் இவருக்கு ஆஸ்திரேலியாவில் தனியாக ஒருரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது நடக்கும் கர்நாடகா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ. இவர் போட்டிக்கு நடுவே இந்திய ரசிகர் ஒருவர் தனது நெஞ்சில் சச்சினின் டாட்டூ வரைந்திருந்ததை பார்த்து அதை போட்டோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில்,’சச்சின் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகரை கண்டுபிடித்து விட்டேன் என நினைக்கிறேன். உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய ரசிகர். அவருக்கு நான் இதை சச்சினிடம் காட்டுவேன் என உறுதியளித்தேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள சச்சின்,’ நன்றி பிங்கா, ஒரு வழியாக என்னை யார்க்கர் ஆக்கிவிட்டீர்கள், ரசிகர்களின் ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி.’ என குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க