• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானுக்கு பதிலா இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கலாம் போல : தலையில் அடித்துக் கொண்ட அப்ரிடி

June 5, 2017 tamil.samayam.com

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான விளையாட்டை பார்த்த பின் பாகிஸ்தான் அணி மேல் வைத்திருந்த நம்பிக்கையே போய்விட்டது என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ஜூன் 1-18ம் தேதி வரை நடைப்பெற்று வருகின்றது. இதில் நேற்று இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டு துவம்சம் செய்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை பார்த்த சையத் அப்ரிடி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பேசினார்.

பாகிஸ்தானை விளாசிய அப்ரிடி:
இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தானின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது. பவுலிங், பீல்டின், பேட்டிங் என அனைத்திலும் சொதப்பலாக செயல்பட்டது.

போட்டிக்கு முதல்நாள் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஜ் அகமது கேம் பிளான் எல்லாம் கொண்டு வந்தார். ஆனால் களத்தில் இறங்கிய பின் அவர்களின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது.

ரோகித் – தவான்:
இந்தியாவின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா – சிகர் தவான் மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கோலி, யுவராஜ் சிங் ஆட்டம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் நின்று விளையாட இடக் கொடுத்தால் , இந்திய அணியின் ரன் வேட்டையை தடுக்க முடியாது என்பதை பாகிஸ்தான் அணி உணர மறுத்து விட்டது.

பவுலிங், பேட்டிங் மோசம்:
பாகிஸ்தானின் பவுலிங் தான் மோசமாக இருந்தது என்று பார்த்தால், பீல்டிங்கும் படுசொதப்பலாக இருந்தது. பல கேட்சுகள் நழுவவிட்டது. பாகிஸ்தானின் மிகப்பெரிய தவறு.

பேட்டிங் பொறுத்தவரை தேவையில்லாத ஷாட்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தது தவறு என பாகிஸ்தான் அணியை கிழி,கிழி என கிழித்துள்ளார் அப்ரிடி.

மேலும் படிக்க