• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திடீர் ஓய்வு முடிவு அறிவித்த பாக்.வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்

July 26, 2019

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஜூலை 2009-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 17 வயதில் பாகிஸ்தான் வீரர் அமீர் அறிமுகமானார். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அமீர், 30.47 சராசரியாக 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் விளையாட முழு கவனம் செலுத்த இருப்பதாகவும், அதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில்

“இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவில்லை சில காலங்களாக இதை பற்றி யோசித்த பின்னரே, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக இந்த முடிவு எடுத்துள்ளேன். நாட்டிற்காக நான் விளையாடியதில் பெருமை கொள்கிறேன். எனக்கு இது நாள் வரை உறுதுனையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும், அணி வீரர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க