• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்

April 22, 2019 தண்டோரா குழு

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது இடம் பெற்றது. நடப்பு சாம்பியன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் தான் இறுதி போட்டி நடத்துவது வழக்கம். அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இறுதிப் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது.

இதற்கிடையில், சேப்பாக்கம் மைதானத்தின் 3 கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்காததால் பயன்படாமல் இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில் இடவசதி கருதி ஐபிஎல் இறுதி போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளே-ஆப்ஸ’ போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. ஐதராபத்தில் மே 12-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

மேலும் படிக்க