• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சச்சின் டெண்டுல்கருக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருது !

July 19, 2019 தண்டோரா குழு

சச்சின் டெண்டுல்கர், ஆலன் டொனால்ட், கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு ICC ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய சச்சின்,

இந்த சந்தர்ப்பத்தில், ஒரு நீண்ட சர்வதேச வாழ்க்கையில் எனது பக்கத்திலிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது பெற்றோர், சகோதரர் அஜித் மற்றும் மனைவி அஞ்சலி ஆகியோர் எனக்கு தூண்களாக இருந்தனர். அதே நேரத்தில் பயிற்சியாளர் ராமகாந்த் அக்ரேக்கர் போன்ற ஒருவரை சிறந்த ஆரம்ப வழிகாட்டியாக நான் பெற்றேன். ICC கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்படுவது ஒரு மரியாதை, இது தலைமுறை தலைமுறையாக கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பை மதிக்கிறது. அவர்கள் அனைவரும் விளையாட்டின் வளர்ச்சிக்கும் பிரபலத்திற்கும் பங்களித்திருக்கிறார்கள். நான் எனது முயற்சியைச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்என டெண்டுல்கர் கூறினார்.

மேலும் படிக்க