• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோபப்பட்ட ரோஹித் சர்மா -அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

April 29, 2019 தண்டோரா குழு

மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

12வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. நேற்று ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 232 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கில், லின், ரஸ்ஸல் என அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ரஸ்ஸல் 40 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

பின்னர், 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை அணியில் சிறப்பாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். இப்போட்டியின் போது, மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுத்தார். இதனால் ரோஹித் கோபமடைந்து நான் ஸ்ட்ரைக்கர்’ முனையில் இருந்த ஸ்டம்ப்களை பேட்டால் தட்டிவிட்டு சென்றார். அவரின் இந்த செயல் சர்ச்சையானது.

இந்நிலையில் அவர் மைதானத்தில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக அவரின் சம்பளத்திலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க