தவறாக செய்தி வெளியிட்ட வழக்கில் பேர்ஃபாக்ஸ் பத்திரிகை நிறுவனம் சார்பாக கிறிஸ் கெய்லுக்கு 1.55 கோடி இழப்பிடு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மசாஜ் செய்யும் பெண் சென்றதாகவும், அவரிடம் கெய்ல் தவறாக நடந்ததாகவும், கெயல் குறித்து ஆஸ்திரேலியாவின் பேர்ஃபாக்ஸ் பத்திரிகை நிறுவனம் செய்தியை வெளியிட்டது.
இந்த சம்பவம் குறித்து கிறிஸ் கெய்ல் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் தன்னை குறித்து தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தனது கிரிக்கெட் வாழ்க்கையை உருக்குலைக்க ஆஸ்திரேலியா செய்தியாளர்கள் சிலர் செய்த சதி இது. தனது பெயர், புகழுக்கு kaகழங்கம் ஏற்படுத்தும் விதமாக வெளியிட்ட செய்தி நிறுவனம் மீது நடவடிக்கையும் மற்றும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கெய்ல் சார்பாக மான நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் கெய்லுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.
மேலும் இந்த வழக்கின நஷ்டஈடு விவரம் மற்றும் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது அதில், கிறிஸ் கெய்ல் மீதான வழக்கில், எந்த ஆதாரமும் இல்லை, செய்தி நிறுவனத்தால் நிரூபணமும் செய்ய முடியாததால், கெய்லுக்கு ரூ. 1 கோடியே 55 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது