• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிரிக்கெட்டின் ‘டொனால்டி டிரம்ப்’ கோலி

March 22, 2017 tamilsamayam.com

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான வார்த்தைப்போர் முடிவுக்கு வருவதாக இல்லை.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.

ராஞ்சி டெஸ்டின் முதல் நாளில் பவுண்டரி தடுக்கும் முயற்சியில், இந்திய கேப்டன் கோலிக்கு வலது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் குத்தி குத்தி காட்டிக்கொண்டே இருக்க, காட்டமான கோலி, ஸ்மித்தை செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு வாங்கு வாங்கினார்.

தவிர, அப்போது இந்திய ஊடகங்கள் எப்போதும் கிரிக்கெட்டுக்கு முக்கியதுவம் அளிப்பதாகவும், ஆஸ்திரேலிலிய ஊடகங்கள் எப்போதும் சர்ச்சைப்பற்றியே கேள்வி எழுப்புவதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் காண்டான ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று, விளையாட்டு உலகின் டொனால்டு டிரம்ப் கோலி என செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை போலவே கோலி எதற்கு எடுத்தாலும், ஊடங்களை குறை சொல்வதாகவும், அதன் மூலம் தன் மீதுள்ள குறையை மறைக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் படுமோசமான செயல்களை மறைக்க, கோலி மீது குறை சொல்லி ஆஸி., வீரர்களுக்கு அந்நாட்டு ஊடகங்கள் ஆதரவு அளித்துவருகிறது.

மேலும் படிக்க