• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது தோனி தன் மனதில் ஒரு ப்ளூப்ரின்ட்டை வைத்திருப்பார் – மெக்கல்லம்

May 20, 2019 தண்டோரா குழு

12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை,
ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி ஜூன் மாதம் 6-ம் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது. உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி வீரர் தோனி குறித்து பிரண்டன் மெக்கல்லம் கருத்து தெரிவித்துள்ளார்.

தோனி பற்றி மெக்கல்லம் கூறும்போது,

தோனி‘இந்திய அணிக்கு விலைமதிப்பற்றவர். சமீபகாலமாக அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அது உலகக்கோப்பை தொடருக்கு உதவியாக இருக்கும். அவர் களத்திற்கு வரும் போது எதிரணியினருக்கு பதட்டத்தை ஏற்படுத்திவிடுவார். ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் மனதில் ஒரு ப்ளூப்ரின்ட்டை வைத்திருப்பார் என்று கூறியுள்ளார்.

மெக்கல்லம் ஐபிஎலில் தோனி தலைமையில் சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க