• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு அடியில் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய யுவராஜ்!

June 12, 2017 tamilsamayam.com

கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க யுவராஜ் சிங் சிக்ஸர் அடித்து போட்டியை நிறைவேற்றி உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த முக்கிய ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்று அசத்தியது.

ரசிகர்களின் வேண்டுகோள்:

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்து 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணிக்கு தவான் 78, கோலி 76 சேர்த்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

சிகர் தவான் அவுட்டான பின் களமிறங்கிய யுவராஜ் சிங், சிறப்பாக விளையாடி வந்தார். அப்போது இந்தியா வெற்றி பெற 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழலில், மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து “எங்களுக்கு தேவை சிக்ஸர்” (We want sixer) என கோஷமிட்டனர்.

அப்போது டுமினி வீசிய 37.6 பந்தை சிக்ஸருக்கு விரட்டி, ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். தோனி எப்போதும் போட்டியை முடிக்கும் போது சிக்ஸர் அடித்து முடித்து வைப்பது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியில் தோனி அந்த நேரத்தில் களமிறங்காததால், ரசிகர்களின் விருப்பத்தை யுவராஜ் சிங் நிறைவேற்றி ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்கச் செய்தார்.

மேலும் படிக்க