• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.பி.எல் 2019ன் முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு

February 19, 2019 தண்டோரா குழு

ஐ.பி.எல் 2019ன் முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 2019 சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்படும். போட்டிகள் அனைத்தும் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

எனினும், ஐ.பி.எல் தொடர் எப்போது துவங்கும்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்த கிரிக்கெட் வெறியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னையில் இந்த போட்டி நடைபெறவிருப்பதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ’டிக்கெட் திட்டம்’ இப்போதே தொடங்கி விட்டது. 2 வாரங்களுக்கான போட்டி அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க