• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.பி.எல்., தொடரின் முதல் நல்ல செய்தி: ‘டான்’ ரோகித், பாண்டியா ‘ரெடி’!

April 1, 2017 tamil.samayam.com

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் நல்ல செய்தியாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாட முழு உடற்தகுதி பெற்றதாக அந்த அணி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் டி-20 தொடரான ஐ.பி.எல்., தொடர், இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 5ல் துவங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் வாரத்தில் நடக்கும் போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இவரைப்போலவே இவரது அணியின், ராகுல், டிவிலியர்ஸ், பின் புனே அணியின் அஷ்வின், தொடர்ந்து முரளி விஜய் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்ததடுத்து வீரர்களின் விலகல் செய்தி வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், முதல் முறையாக ஐ.பி.எல்., சார்பாக ஒரு ஆறுதலான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீண்ட நாட்களாக காயம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த சீனியர் வீரர் ரோகித் சர்மா, அந்த அணியின் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாட முழூஉடற்தகுதியுடன் உள்ளதாக ஐ.பி.எல்.,நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க