• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் தொடரில் புதிய முறையில் லீக் ஸ்டேஜ்!

February 25, 2022 தண்டோரா குழு

2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்காக ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

15வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.மும்பை, பூனேவில் உள்ள 4 மைதானங்களில் போட்டிகள் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்தநிலையில்,இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் ஒவ்வொரு அணியும் அதே பிரிவைச் சேர்ந்த மற்ற அணிகளுடன் இரண்டு போட்டிகளிலும், மற்றொரு பிரிவில் அதே இடத்தில் உள்ள இன்னொரு அணியுடன் 2 போட்டிகளிலும், இன்னொரு பிரிவின் மீதம் இருக்கும் அணிகளுடன் தலா 1 போட்டியிலும் விளையாட உள்ளது.

ஏ குரூப்பில் மும்பை, கொல்கத்தா, லக்னோ,ராஜஸ்தான், டெல்லி அணிகளும் பி குரூப்பில் சென்னை, ஹதராபாத்,பஞ்சாப், குஜராத், பெங்களூரு அணிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க