• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எவ்வளவு நேரம்னாலும் பந்து வீசுவேன் -அஸ்வினின் புதிய சாதனை

March 6, 2017 tamilsamayam.com

ஒரு ஆண்டில் கிரிக்கெட்டில் அதிகமுறை பந்து வீசி சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.இந்திய அணியின் தற்போதைய சுழல் பந்துவீச்சாளர்களில் முன்னிலை வகிப்பவர் அஸ்வின். இவர் பந்து வீசுவதோடு, பேட்டிங்கில் கலக்கி வருகிறார். இதனால் தொடர்ந்து ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் ஒரு ஆண்டில் அதிக முறை பந்து வீசிய இந்திய சுழல் பந்துவீச்சாளர்களில் முதல் இடம்ப் பிடித்துள்ளார் அஸ்வின். 2016/17ம் ஆண்டில் மட்டும் 3,701 பந்துகள் அதாவது 616.5 ஓவர்கள் வீசியுள்ளார்.

முன்னதாக இந்த சாதனை படைத்திருந்த அனில் கும்ளே 2004/05ம் ஆண்டில் 3,673 பந்துகள் (612.1 ஓவர்கள்) வீசி இருந்தார். கும்ளேவின் சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

முன்றாவது இடத்தில் வினோ முன்கட் 1952/53ம் ஆண்டு 3662 பந்துகள் வீசியுள்ளார்.
4வது இடத்தில் திலிப் தோசி 1979/80ம் ஆண்டில் 3515 பந்துகளும், 5வது இடத்தில் ரவிந்திர ஜடேஜா 2016/17ல் 3469 பந்துகளை வீசி முதல் 5 இடத்தை பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க