• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய்சங்கர் விலகல்

July 1, 2019 தண்டோரா குழு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய்சங்கர் விலகினார்.

17வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 30ம் தேதி துவங்கிய இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 6 போட்டிகளில் தோல்வியையே தழுவாத இந்தியஅணி, இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதல் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கையில் காயமடைந்த தவான், உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார்.இதனைத் தொடர்ந்து ராகுல் துவக்க வீரராக களமிறங்க ஆரம்பித்தார். விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்கும் வாய்ப்பை பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் சங்கர், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 29 ரன்களும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 14 ரன்களும் மட்டுமே எடுத்தார். இதனால் ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காலில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவரை நீக்குவதாக கூறி ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க