ராஞ்சி ஒருநாள் போட்டிக்கான சம்பளத்தை புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்கள் குடும்ப நிதிக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வழங்கினர்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டி தொடங்கும் முன்பாக, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்தியப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் அந்தஸ்தில் உள்ள விக்கெட் கீப்பர் தோனி, ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளை வழங்கினார்.
இந்த தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் போட்டியில் விளையாடினர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புக்கு உதவ தேசிய பாதுகாப்பு நிதி திரட்ட உதவும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.
மேலும், இந்த ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கவும் கோலி தலைமையிலான அணியினர் முடிவு செய்திருந்தனர்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்