• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீரென ஊக்க மருந்து சோதனை

June 4, 2019 தண்டோரா குழு

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென நேற்று ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இத்தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரை மட்டும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் அழைத்துச் சென்றனர்.இதை மைதான அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இரண்டு கட்டமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில், சிறுநீர் சோத னையும் 45 நிமிடத்துக்கு பின் ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஊக்க மருந்து சோதனையை, இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க