• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய அணிக்கு 1374 பந்தில் 441 ரன்கள் இலக்கு!

February 25, 2017 tamilsamayam.com

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 441 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புனேயில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக சொதப்ப, முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து கைகொடுக்க, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து 298 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஸ்மித் சதம்:

இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, கேப்டன் ஸ்மித் (109) அடித்து கைகொடிக்க, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இதையடுத்து இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு மூன்றாவது பெரிய இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. இதற்கு முன் கடந்த 2004-05ல் நாக்பூரில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 542 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. பின் பெங்களூருவில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, 456 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வென்றது.

1374 பந்துகள்:

441 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணி, அளவுக்கு அதிகமான நேரம் உள்ளது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் 49 ஓவர்கள், பின் நான்காவது, ஐந்தாவது நாள் என முழுமையாக 180 ஓவர்கள் என 1374 பந்துகள் உள்ளது. அதனால் இந்திய அணி இந்த சாதனை இலக்கை எட்ட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க