• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

February 9, 2021 தண்டோரா குழு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்
போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் ரிஷாப் பண்ட் 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர்.இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்தை விட 241 ரன்களை பின்தங்கி இருந்த போதும், இந்தியாவுக்கு FOLLOW – ON வழங்கப்படவில்லை. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அஸ்வினின் சுழற்பந்தில் 178 ரன்களில் சுருண்டது.இதைத்தொடர்ந்து 420 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித்சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 4ம் நாள் இறுதியில் இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களை எடுத்துள்ளது.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

மேலும் படிக்க