• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பும்ராவிற்கு ஓய்வு !

January 8, 2019 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் டிராவில் முடிந்தது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனையடுத்து, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
ஜனவரி 15 ஆம் தேதி 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், 18 ஆம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய வேகபந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கபட்டுள்ளது. அவருக்கு பதிலாக, முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித்தொடரில் அபாரமாக பந்து வீசிய பும்ரா, மொத்தம் 157 ஓவர்கள் வீசிய பும்ரா 21 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது பந்து வீச்சு சராசரி 17 ஆகும். பும்ராவின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்தும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 3 இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் சித்தார்த் கவுலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க