• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெற்றது இந்தியா!

March 27, 2017 tamil.samayam.com

தர்மசாலா : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா, சஹாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸியை விட முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. 3 போட்டிகள் முடிவில் இந்தியா – ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

4வது போட்டி தர்மசாலாவில் நடைப்பெற்று வருகின்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடி வரும் இந்தியாவுக்கு ராகுல் 60, புஜாரா 57, ரஹானே 46,அஸ்வின் 30 ரன்கள் எடுத்து இந்தியாவை வலுப்பெற செய்தனர்.

இந்நிலையில் களமிறங்கிய ஜடேஜா, சஹா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து இந்தியாவை முன்னிலை பெறச்செய்தனர்.

ஜடேஜா அரைசதம் கடந்து 63 ரன்களும், சஹா 31 ரன்களும் எடுத்து கும்மின்ஸ் பந்தில் அவுட்டாகி வெளியேறினர்.

மேலும் படிக்க