• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸியை வீழ்த்தி நம்பர் 1 என்பதை நிரூபித்த இந்தியா!

March 7, 2017 tamilsamayam.com

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் எழுச்சி பெற்றதால் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது நம்பர் 1 அணி என்பதை நிரூபித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. 2 நாட்கள் உள்ள நிலையில் மிக நிதானமாக விளையாட தொடங்கிய ஆஸி, இந்திய அணி சூழல் மற்றும் வேக பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரரகளான வார்னர் 17, மிச்செல் மார்ஸ் 13, வேட் 0, ஸ்டார்க் 1, லியோன் 2 ரன்னில் அஸ்வினின் அசத்தல் பந்தில் அவுட்டாகி வெளியேறினர்.உமேஷ் யாதவின் வேகத்தில் ஸ்மித் 28, சான் மார்ஸ் 9 ரன்களில் வெளியேறினர்.தொடக்க வீரர் ரென்சாவ் 5 ரன் எடுத்த போது இசாந்த் பந்தில் அவுட்டானார். ஓ கெபி ஜடேஜா பந்தில் போல்டாகி பறிதாபமாக வெளியேறினார்.

188 ரன்கள் தான் இலக்கு என்ற மிகவும் இக்கட்டான நிலையில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 3 மணி நேரத்தில் 10விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி, 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நம்பர் 1 அணி என நிரூபித்துள்ளது.அஸ்வின் 2வது இன்னிங்சில் 41 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வெற்றியை உறுதி செய்தார்.

மேலும் படிக்க