• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடி வெளுத்து வாங்கிய அப்ரிதி: 42 பந்தில் சதம் விளாசி அசத்தல்!

August 23, 2017

இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி-20 பிளாஸ்ட் முதல் காலிறுதியில் ஹாம்ஷியர் வீரர் அப்ரிதி 42 பந்தில் சதம் விளாசினார்.

இங்கிலாந்தில் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடாரான நாட்வெஸ்ட் டி-20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பெர்பியில் நடந்த முதல் காலிறுதி போட்டியில் ஹாம்ஷியர், டெர்பிஷியர் அணிகள் மோதின.

இதில் முதலில் ’டாஸ்’ வென்ற டெர்பிஷியர் அணி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹாம்ஷியர் அணிக்கு துவக்க வீரர் அப்ரிதி அதிரடியாக சதம் விளாசி (101 ரன்கள், 10 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் வின்சி (55 ரன்கள்) அரைசதம் கைகொடுக்க, அந்த அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய டெர்பிஷியர் அணி, 19.5 ஓவரில், 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஹாம்ஷியர் அணி 101 ரன்கள் வித்தியாசத்தல் வெற்றி பெற்றது. டெர்பிஷியர் அணிக்கு எதிராக சதம் விளாசிய ஹாம்ஷியர் வீரர் அப்ரிதி, டி-20 அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

மேலும் படிக்க