September 10, 2018
தண்டோரா குழு
கோவை பெரியநாயக்கன்பாளையம் YSCC கிரிக்கெட் அணி சார்பாக ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் UIT கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
ஐந்தாம் ஆண்டு YSCC கிரிக்கெட் அணி நடத்தும் இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கு கோவை பெரியநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் அ.அறிவரசு அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.நாக்வுட்முறையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் வீதம்,ஒவ்வொரு அணியிலும் 6 பேர் விளையாடினர்.
இப்போட்டியில் முதலிடம் பெற்ற YSCC அணிக்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் அ.அறிவரசு 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கினார்.இரண்டாம் இடம் பெற்ற எம்.ஐ.பி.ஏ அணிக்கு அகில் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் சந்துரு மற்றும் பார்த்திபன் 6 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும்,மூன்றாம் இடம் பெற்ற எம்.ஐ.பி.ஏ பி அணிக்கு எஸ்.கே மோட்டார்ஸ் யமகா ஷோரூம் உரிமையாளர் எல்.கலைவாணி செந்தில் குமார் 3 ஆயிரம் ரூபாயும்,நான்காம் இடம் பெற்ற கே.என்.பி.சி.சி அணிக்கு ஐடியல் பர்னிச்சர் உரிமையாளர் ரபீக் அஹ்மது 1,500 ரூபாயும் வழங்கினார்கள்.
இந்த போட்டி தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்ட விக்கிக்கும்,சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்ட திலீப்பிற்கும் கோப்பை வழங்கப்பட்டது.மேலும்,இப்போட்டியை நடத்த உதவிய மாடசாமி மற்றும் ஸ்பான்சர்ஸ் அனைவருக்கு YSCC கிரிக்கெட் அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.