• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓடிசாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி மீட்பு

December 26, 2017 தண்டோரா குழு

ஓடிசாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி, சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிஸா மாநிலத்திலுள்ள குலாசார் கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 3 வயது பெண் ராதா சாஹு,வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்போது அங்கு தோண்டப்படிருந்த சுமார் 50 மீட்டர் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள். குழந்தையின் அலறல் சட்டம் கேட்ட பெற்றோர்,வேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, ராதா குழிக்குள் விழுந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தந்துள்ளனர். தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,அந்த குழிக்குள் கேமரா ஒன்றை அனுப்பி, குழந்தை உயிருடன் இருக்கிறதா? என்று தெரிந்துக்கொண்டனர். குழந்தை உயிருடன் இருப்பதை உறுதி செய்தபிறகு, அதை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதனிடையே,இச்சம்பவம் சம்பவம் குறித்து ஓடிஸா மாநிலத்தின் “ODRAF” என்ற அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே, சுமார் 10 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, சிறுமி ராதாவை அந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டு உள்ளனர்.

மேலும் படிக்க