September 11, 2018
தண்டோரா குழு
மேற்கு வங்கத்தில் பெட்ரோல்,டீசல் விலையில் தலா ரூ.1 குறைக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.வரலாறு காண அளவில் உயர்ந்துள்ள இந்த பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பொது மக்கள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,இந்த விலை உயர்வுக்கு எதிராக,எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில்,ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து, தற்போது மேற்கு வங்காள மாநில அரசும் விலை குறைப்பை அறிவித்துள்ளது.அம்மாநிலத்தில் பெட்ரோல்,டீசல் மீதான விலையில் ரூ.1 குறைக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.